தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வரும் தல அஜித் நடிப்பில் சமீபத்தில் வலிமை திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இவர் தற்போது எச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் துணிவு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மஞ்சு வாரியர் ஹீரோயினாக நடிக்கிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்த வருட பொங்கலுக்கு துணிவு படத்தை வெளியிட படக் குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தப் படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தல அஜித் ஏகே 62 படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் புதிதாக மிரட்டலான வில்லன் ஒருவர் இடம் பெறுவார் என விக்னேஷ் சிவன் சமீபத்தில் அறிவித்திருந்தார். இதன் காரணமாக ஏகே 62 திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்த நிலையில், விஜய் சேதுபதி அல்லது ராணா வில்லனாக நடிப்பார் என்று பேச்சுக்கள் கிளம்பியது.
ஆனால் தற்போது ஏகே 62 படத்தில் இணையும் வில்லன் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களை இயக்கி தனக்கென தனி இடத்தை பதித்த கௌதம் மேனன் தான் ஏகே 62 திரைப்படத்தில் வில்லனாக நடிக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது.
இவர் சில படங்களில் நடித்துள்ளதோடு, பலருக்கு டப்பிங் வசனமும் பேசியுள்ளார். அதன் பிறகு கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படத்தில் கௌதம் மேனனின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. மேலும் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தை கௌதம் மேனன் இயக்கியிருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற அதாரு அதாரு என்ற பாடலை இயக்குனர் விக்னேஷ் சிவன் எழுதி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.