சேலம் மாநகர் அம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்த ஆர்எஸ்எஸ் பிரமுகர் ராஜன் என்பவர் வீட்டில் இன்று அதிகாலை பெட்ரோல் குண்டானது வீசப்பட்டது. இதனை அடுத்து சேலம் மாநகர போலீசார் அங்குள்ள சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக கொண்டு விசாரணைக்காக 7 நபர்களை அம்மாபேட்டை போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்திய நிலையில் தற்போது இருவரை சேலம் மாநகர போலீசார் கைது செய்திருக்கிறார்கள்.
குறிப்பாக எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த மாவட்ட தலைவர் சையது அலி மற்றும் எஸ்டிபிஐ கட்சி பொறுப்பாளர் காஜா உஹசேன் ஆகிய இருவரையும் அம்மாபேட்டை போலீசார் கைது செய்திருக்கிறார்கள். முன்னதாக இந்த கைது நடவடிக்கையை கண்டித்து அம்மாபேட்டை காவல் நிலையம் முன்பு ஏராளமான எஸ்டிபிஐ கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் அனைவரையும் சேலம் மாநகர போலீசார் கைது செய்து இருக்கிறார்கள்.