Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

எதிர்த்த சாம்….. “க்ரீஸ்க்கு உள்ள இருக்குறது கஷ்டமா?”…. இந்திய வீராங்கனை தீப்திக்கு ஆதரவு தெரிவித்த இங்கிலாந்து வீரர்..!!

இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் மான்கட் முறையில் அவுட் செய்த இந்திய வீராங்கனை தீப்தி சர்மாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்..

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நேற்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி 45.4 ஓவர்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 169 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.  இதையடுத்து ஆடிய இங்கிலாந்து அணி 43.3 ஓவரில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 153 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.. இதனால் இந்திய அணி 3 -0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது..

இப்போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி சேஸ் செய்யும்போது 35.2 ஓவரில் 118/9 விக்கெட் இழந்து தவித்தது. அப்போது சார்லி டீனுடன், டேவிஸ் ஜோடி சேர்ந்தார். இவர்கள் இருவரும் சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்று கொண்டிருந்தபோது 44ஆவது ஓவரை தீப்தி சர்மா வீசினார்..

அந்த ஓவரின் 3ஆவது பந்தை தீப்தி வீசுவதற்கு முன்பாகவே நான் -ஸ்ட்ரைக்கில் இருந்த சார்லி டீன் கோட்டை விட்டு வெளியேறி ரன் எடுக்க முயல, அவர் மன்கட் முறையில் ரன் அவுட் செய்து அம்பெயரிடம் அவுட் கேட்டார்.. அதன்பின்  3ஆவது நடுவரிடம் கேட்கப்பட, டிவி ரீபிளேவில் அவுட் என வந்தது.. இதனால் 47 ரன்கள் எடுத்திருந்த டீன் துரதிர்ஷ்டவசமாக அவுட் ஆனார்.. இதனால் இந்தியா வென்றது.

இதனை தாங்கிக்கொள்ள முடியாத டீன் கண்ணீர் விட்டு அழுதுவிட்டார்.. அவரை சக வீரரான டேவிஸ் தேற்றுகிறார்.. இந்த அவுட்டால் பெவிலியனில் இருந்த இங்கிலாந்து வீரர்களும் சற்று அதிர்ச்சியடைந்தனர்.. இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.. இந்த அவுட் பற்றி கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.. இதற்கு பலரும் ஐசிசி விதிகளில் உள்ளதை செய்ததாக பாராட்டினாலும், சிலர் ஒருமுறை அவரை எச்சரித்திருக்கலாம் இப்படி அவுட் செய்திருக்க கூடாது என்று கூறி வருகின்றனர்..

மேலும் முன்னாள் இங்கிலாந்து வீரர்கள் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட், சாம் பில்லிங்ஸ், வீராங்கனைகள் மற்றும் கிரிக்கெட் ரசிகர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.. அதே நேரத்தில் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் ஆகியோர் தீப்தி சர்மாவுக்கு ஆதரவாக பேசி உள்ளனர்.

இந்நிலையில் இங்கிலாந்து வீரர் சாம் பில்லிங்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், இது போலி பீல்டிங்கிலிருந்து வேறுபட்டதா? இது 5 பெனால்டி ரன்கள். கடைசியாக சிந்தித்தது, மற்ற எல்லா யுக்திகளும் தோல்வியடைந்து ஆட்டம் நழுவிக்கொண்டிருக்கும் போது மட்டும் ஏன் இந்த யுக்தி பயன்படுத்தப்படுகிறது? விளையாட்டின் மாண்பை குறைக்கும் செயலாக இது தெரியவில்லையா? சட்டங்களுக்குள் நல்லது, கிரிக்கெட் ஆன்மாக்களுக்கு இது எதிரானது. எனது கருத்து… சட்டம் மீண்டும் ஒரு எச்சரிக்கை அமைப்பாக மாற்றப்பட வேண்டும் அல்லது அதிகப்படியாக இப்படி  செய்தால் அபராதம் விதிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

இந்த கமெண்ட்டிற்கு கீழே பதிலளித்த மற்றொரு இங்கிலாந்து வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ், பந்து கையை விட்டு வெளியேறும் வரை எதிர்முனையில் இருக்கும் ஸ்ட்ரைக்கர் அல்லாதவர் தங்கள் கிரீஸில் இருப்பது அவ்வளவு கடினமான காரியம் இல்லையே என்று தீப்தி சர்மாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.. இவரது பதிவு வைரலாகி வருகிறது..

Categories

Tech |