Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“உடலை துண்டு துண்டாக வெட்டி மூன்று இடங்களில் வீசினோம்”…. கைதானவர் பரபரப்பு வாக்குமூலம்…..!!!!!

அழகு நிலைய ஊழியர் உடலை துண்டாகி மூன்று இடங்களில் வீசியாதாக கைதானவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கோவை மாவட்டத்தை அடுத்துள்ள துடியலூர் அருகே சாலையோரத்தில் இருக்கும் குப்பை தொட்டியில் இளைஞர் ஒருவரின் இடது கை வெட்டப்பட்ட நிலையில் கிடந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள சங்கராபாளையத்தைச் சேர்ந்த பிரபு என்பது தெரியவந்தது. இவர் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சரவணம்பட்டி ஜனதா நகரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி அங்குள்ள அழகு நிலையம் ஒன்றில் ஊழியராக வேலை செய்து வந்துள்ளார். கள்ள காதல் விவகாரத்தில் இவர் கொலை செய்யப்பட்டு உடலை 12 துண்டாக வெட்டி வீசியது தெரிய வந்திருக்கின்றது.

இக்கொலை தொடர்பாக போலீசார் கவிதா, திவாகர், கார்த்திக் உள்ளிட்டோரை கைது செய்து வாக்குமூலம் பெற்றார்கள். இதில் திவாகர் அளித்த வாக்குமூலத்தில் கூறியுள்ளதாவது, எனக்கும் கவிதாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனால் நாங்கள் அடிக்கடி தனியாக சந்தித்து உல்லாசமாக இருந்து வந்த நிலையில் சென்ற சில நாட்களாக கவிதா மிகவும் மன உளைச்சலில் இருந்தார். இது குறித்து அவரிடம் நான் கேட்ட பொழுது பிரபு தனது செல்போனில் கவிதாவின் ஆபாச படங்களை வைத்திருப்பதாகவும் அதை காட்டி செக்ஸ் டார்ச்சர் செய்வதாகவும் கூறியுள்ளார்.

இதனால் நாங்கள் பிரபுவை தீர்த்து கட்ட முடிவு செய்தோம். இதற்கு எனது உறவினர் கார்த்திக்கை சேர்த்துக் கொண்டேன். சம்பவத்தன்று பிரபுவுக்கு போன் செய்து வரவழைத்து எனது வீட்டிற்கு நானும் கார்த்திக்கும் அழைத்துச் சென்றோம். பின் பேச்சு வார்த்தை நடத்திய பொழுது எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த நாங்கள் பிரபுவின் கழுத்தில் வேகமாக குத்தியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரின் உடலை பையில் அடைப்பதற்கு ஏதுவாக 12 துண்டுகளாக வெட்டி மூன்று பைகளில் அடைத்தோம். பின்னர் மூன்று பைகளையும் வெவ்வேறு இடங்களில் தூக்கி வீசினோம். இது குறித்து கவிதாவுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு உடலை துண்டு துண்டாக வெட்டி வீசியதால் போலீசார் கண்டுபிடிக்க முடியாது என கூறினேன். ஆனால் போலீசார் விசாரணை நடத்தி எங்களை கைது செய்து விட்டதாக வாக்குமூலம் அளித்திருக்கின்றார்.

Categories

Tech |