தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த இரண்டு பேரை போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தார்கள்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி அருகே இருக்கும் வடக்கு தெருவை சேர்ந்த தினேஷ் என்பவரும் சமுத்திரம் சிவன் கோவில் தெருவை சேர்ந்த பூர்ண சந்திரன் என்பவரும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் இவர்கள் இரண்டு பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் எனவும் போலீஸ் சூப்பிரண்டு நிஷா மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.
இதையடுத்து மாவட்ட ஆட்சியர் இரண்டு பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதன் பேரில் போலீசார் தினேஷ் மற்றும் பூரண சந்திரன் உள்ளிட்ட இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தார்கள்.