Categories
மாவட்ட செய்திகள்

“24 மணி நேரமும் டாக்டர்கள் பணியில் ஈடுபட வேண்டும்”….. மக்கள் கோரிக்கை…!!!!!!

வள்ளுவக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணி நேரமும் டாக்டர்கள் பணியில் ஈடுபட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள சீர்காழி அருகே இருக்கும் வள்ளுவக்குடி கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகின்றது. இங்கு வள்ளுவக்குடி, அகனி, கொண்டல்,, தென்னங்குடி, ஏனாகுடி, நிம்மேலி, மருதங்குடி, ஆலஞ்சேரி, கொண்டல், கொட்டாயமேடு, அத்தியூர், தேனூர் ஆகிய கிராமங்களை சேர்ந்த மக்கள் தினமும் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றார்கள்.

இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை மட்டுமே டாக்டர் பணியில் ஈடுபடுவதாகவும் அதற்கு மேல் டாக்டர்கள் இல்லாததால் நோயாளிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றார்கள். இதனால் 15 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டிய நிலை உள்ளது . இதனால் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றது. ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் 24 மணி நேரமும் டாக்டர்கள் மற்றும் கூடுதல் பணியாளர்களைக் கொண்டு வள்ளுவக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட வேண்டும் எனவும் ஆபத்தான நிலையில் இருக்கும் கட்டிடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை எடுத்துள்ளார்கள்.

Categories

Tech |