Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

திடீரென கேட்ட பயங்கர வெடிசத்தம்….. கோவை ரயில் நிலையத்தில் பரபரப்பு…..!!!!

பயங்கர வெடி சத்தம் கேட்ட சம்பவம் ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் பெட்ரோல் குண்டு வீசும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று காலை கோவை ரயில் நிலையத்தில் திடீரென வெடி வெடிப்பது போல பயங்கர சத்தம் கேட்டது.

இதனால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போலீசார் சத்தம் கேட்ட திசையை நோக்கி விரைந்து சென்று பார்த்தனர். அப்போது அங்கு நிறுத்தப்பட்டிருந்த 4 சக்கர வாகனத்தில் ஸ்டெப்னி டயர் வெடித்தது தெரியவந்தது. இதனை அடுத்து வாகனத்தின் ஓட்டுநர் டயரை அப்புறப்படுத்தினார். இந்த சம்பவம் ரயில் நிலையப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |