Categories
தேசிய செய்திகள்

BIG ALERT: ஆபாச படம் பார்ப்பவரா?….. 20 மாநிலங்களில் அதிரடி சோதனை…..!!!

சமீபகாலமாக இணையத்தில் சிறார்கள் ஆபாச படங்கள் பதிவிடும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இதனால் இணையதளத்தில் சிறார் ஆபாச படங்களை பதிவிடுவோர், பதிவிறக்கம் செய்வோர் மற்றும் பகிர்வோரை சிபிஐ கண்காணித்து வருவதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே நேற்று இருபது மாநிலங்களில் 56 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் பேசுகையில்,சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையதளங்களில் சிறுமியரின் ஆபாச வீடியோ மற்றும் புகைப்படங்கள் புழக்கத்தில் இருப்பதை தடுக்க இந்த சோதனை நடைபெற்றது.

ஆபாச வீடியோக்களை தனிநபர் மற்றும் குழுவினர் இணையத்தில் பகிர்ந்து சிறுவர்களை மிரட்டி பணம் பறிக்கும் சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அதனால் இவர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்கும் நோக்கத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டது.சிறுமியரின் ஆபாச வீடியோ மற்றும் படங்கள் குறித்த பிரச்சனையை கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் உச்சநீதிமன்றம் கண்காணித்து வருவதாகவும் கடந்த வாரம் இது சம்பந்தமான விரிவான அறிக்கையை சமர்ப்பிக்கும் படி மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற உத்தரவிட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |