தமிழ் சினிமாவில் காதல் தேசம், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், சினேகிதியே, டேவிட், தாயின் மணிக்கொடி போன்ற பல படங்களில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை தபு. இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் பாலிவுட் சினிமாவிலும் நடித்து வருகிறார். நடிகை தபுவுக்கு தற்போது 50 வயது ஆகிறது. இவருக்கு பட வாய்ப்புகள் தற்போதும் குவிந்த வண்ணமாகவே இருக்கிறது. இவர் 50 வயது ஆகியும் திருமணம் செய்து கொள்ளவில்லை. இந்நிலையில் சமீபத்தில் ஒரு ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பேட்டி கொடுத்துள்ளார்.
அவர் கூறியதாவது, என்னுடைய அழகின் ரகசியம் எதுவும் இல்லை. சிலர் பெரும்பாலும் முகத்திற்கு வீட்டில் உள்ள வைத்தியங்களை பரிந்துரைக்கிறார்கள். அப்படி செய்வதால் சருமம் மிகவும் அழகாக இருப்பதாக என்னுடைய ஒப்பனை கலைஞர் கூட கூறுகிறார். ஆனால் முகத்திற்கு காப்பி மற்றும் வீட்டு வைத்தியங்களால் செய்யப்படும் மேக்கப் மட்டும் போதாது எனவும், கொஞ்சம் கிரீமும் பயன்படுத்த வேண்டும் என்று கூறினார்.
இதனால் 50,000 ரூபாய் மதிப்புள்ள ஃபேஸ் க்ரீமை நான் வாங்கினேன். ஆனால் அந்த ஃபேஸ் க்ரீமால் எந்தவித நன்மையும் கிடைக்கவில்லை. இதனால் மீண்டும் அந்த ஃபேஸ் க்ரீமை நான் வாங்கவில்லை என்று கூறினார். மேலும் என்னால் எந்த விதத்திலும் அழகாக இருக்க முடியும் என்பதால், நானே என்னுடைய முகத்தை கெடுக்க விரும்பவில்லை என்றும் கூறியுள்ளார்.