நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் சிலிண்டரின் விலை ஆயிரம் ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.இதனால் மக்கள் சிரமத்தில் உள்ள நிலையில் மற்றொரு பக்கம் சிலிண்டருக்கான மானியமும் வரவில்லை என தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. ஆனால் சிலிண்டர் மானியத்தை நிறுத்தவில்லை என்று அரசு தரப்பில் கூறப்பட்ட நிலையில் சிலிண்டருக்கு 200 ரூபாய் மானியம் வழங்கப்படும் என அண்மையில் மத்திய அரசு அறிவித்தது.
இருந்தாலும் இந்த மானியம் உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு மட்டுமே வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது. அதனால் அனைவருக்கும் இந்த மானியம் கிடைத்து விடாது.பலரும் சிலிண்டர் மானியம் வருகிறதா இல்லையா என்பதை தெரியாமல் உள்ளனர்.ஏனென்றால் சிலிண்டர் மானியம் குறிப்பிட்ட தேதியில் அவரவர் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படும்.அப்படி வங்கி கணக்கில் சிலிண்டர் மானியம் டெபாசிட் செய்யப்பட்டால் அதற்கான எஸ்எம்எஸ் வாடிக்கையாளர்களுக்கு வந்து சேரும்.
இருந்தாலும் பலருக்கும் எஸ்எம்எஸ் வருவதில்லை என கூறப்படுகிறது. இதனைப் போலவே சிலிண்டர் மானியம் வருவதை எளிதில் கண்டுபிடிக்க mylpg என்ற இணையதளமும் செயல்பாட்டில் உள்ளது.இருந்தாலும் இந்த நடைமுறை சிக்கல் இருப்பதாக வாடிக்கையாளர்கள் கூறுவதால் சீண்டருக்கு மானியம் வருகிறதா இல்லையா என்பதை கண்டுபிடிக்க மற்றொரு வழியும் உள்ளது.
அதாவது சிலிண்டர் டெலிவரி எடுத்து வரும் நபரிடம் வாடிக்கையாளர்கள் மானியம் குறித்த தகவல்களை தெரிந்து கொள்ளலாம். சிலிண்டர் டெலிவரி மேன்களுக்காகவே பிரத்தியேகமாக மொபைல் செயலி ஒன்றும் செயல்பாட்டில் உள்ளது. அதில் டெலிவரி விவரம் மற்றும் பணம் செலுத்துவது, ஸ்ரீதர் மானியம் தொடர்பான அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ள முடியும். HP கேஸ் சிலிண்டர் டெலிவரி மேங்களிடம் vitran என்ற மொபைல் செயலி உள்ளது.இந்த செயலி மூலமாக வாடிக்கையாளர்கள் தங்களின் சிலிண்டர் மானியம் குறித்த விபரங்களை எளிதில் தெரிந்து கொள்ள முடியும்.