தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே அலுவலகத்தில் வேலை செய்பவர்களை இடம் மாற்றம் செய்ய பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், பள்ளிக்கல்வித்துறை அலுவலகங்களில் பணிபுரியக்கூடிய மாவட்ட கல்வி அலுவலகங்களில் உதவியாளர்கள், கண்காணிப்பாளர்கள் மற்றும் இடைநிலை உதவியாளர்கள் 2022 ஆம் ஆண்டு ஜூன் 1ஆம் தேதி நிலவரப்படி மூன்று ஆண்டுகளாக ஒரே அலுவலகத்தில் பணி செய்திருந்தால் இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அனைத்து மாவட்டத்திலும் உள்ள ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மற்றும் மாவட்ட ஆசிரியர் கல்வி, பயிற்சி நிறுவனம் மற்றும் ஒன்றிய ஆசிரியர் கல்வி, பயிற்சி நிறுவனம் ஆகியவற்றில்பணியாற்றும் கண்காணிப்பாளர்களும் தவறாமல் கலந்தாய்வில் கலந்து கொண்டு புதிய பணியிடத்தை தேர்வு செய்ய அறிவுறுத்த வேண்டும்.