தமிழக முதலமைச்சர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழக சட்டசபையில் வளர்ச்சி துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் வசிக்கும் தமிழர்களுக்கு தமிழ் கற்பிக்க தமிழ் பரப்புரை கழகம் உருவாக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். இதற்கான தொடக்க விழா நேற்று அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விவேகானந்தர் அரங்கில் நடைபெற்றது. இதற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கினார். உயர்கல்வி அமைச்சர் பொன்முடி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், வெளிநாடுகளில் உள்ள தமிழ் சங்கங்களின் பிரதிநிதிகள், ஆசிரியர்கள், அறிஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதன் பின்னர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 24 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட பாட புத்தகங்களை வழங்கினார். அதன் பின்னர் அவர் கூறியதாவது. வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது தமிழாக இருக்கட்டும் என்பதை முழுக்கமாகக் கொண்ட தி.மு.க. அரசுக்கு தமிழ் பரப்புரை கழகம் தொடங்குவது என்பது முதல் கடமை. மேலும் பல ஆண்டுகளாக தமிழில் பழமையான சொத்துகளை சேகரிக்காமல் அழிந்து போனது. அதனால் நமது அரசு தொழில்நுட்ப அடிப்படையில் அதனை மாற்றி வைத்திருக்கிறது. மேலும் தமிழ் தொண்டை செய்து வரும் அமைச்சர் மனோ தங்கராஜையும், இந்த பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட தமிழ் இணைய கல்வி கழகத்தின் தலைவர் புதிய சந்திரனையும் நான் மனதார பாராட்டுகிறேன்.
இந்நிலையில் தமிழர்கள் ம30-க்கும் மேற்பட்ட நாடுகளில் அதிகமாகவும், 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் குறைவான எண்ணிக்கையிலும் வாழ்கின்றனர். அதில் சில நாடுகளில் தமிழ் எழுதவும், பேசவும், படிக்கவும் மறந்து தமிழர்கள் இருக்கின்றனர். இவர்கள் அனைவருக்கும் தமிழ் சொல்லிக் கொடுப்பதற்கு தான் இந்த தமிழ் பரப்புரை கழகம் தொடங்கப்பட்டுள்ளது. இதனால் நாம் அனைவரும் உணர்வாள், உள்ளத்தால், தமிழால் இணைந்துள்ளோம். ஏனென்றால் மொழிக்கு மட்டும்தான் இப்படி அன்பால் இணைக்க கூடிய ஆற்றல் உண்டு. மொழியால் இணைந்தவர்களை சாதியால், மதத்தால் பிரிக்க முடியாது. இதன் முக்கிய நோக்கம் தமிழ் மொழியை உலகம் முழுவதும் கொண்டு செல்வது தான்.
மேலும் தமிழ் மொழிக்கு செம்மொழி அங்கீகாரம் பெற்ற முதல் பொருளை அருங்காட்சியகம் அமைத்தது வரை நாங்கள் தமிழுக்காகவும், தமிழர்களின் தொன்மைக்காகவும் முன்னெடுக்கும் முயற்சிகள் பல. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்னால் தமிழக மக்கள் அகில இந்திய தலைவர் ஒருவர் தமிழுக்கு தி.மு.க. என்ன செய்தது என்று கேட்டுவிட்டு சென்றார். அதற்கு நாங்கள் தமிழுக்கு என்ன செய்யவில்லை என்று பதில் கொடுத்தோம். இந்நிலையில் ஒரு ஆண்டு காலத்தில் தமிழ் தொண்டு ஆற்றிய தி.மு.க. ஆட்சி அதற்கு மடகு மகத்தான தமிழ் பரப்புரை கழகம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் இன்று தொடங்கப்பட்டுள்ள இந்த தமிழ் பரப்புரை கழகத்தின் மூலமாக 22 நாடுகள் மற்றும் 20 மாநிலங்களை சேர்ந்த 25 ஆயிரம் மாணவர்கள் முதல் கட்டமாக பயனடைந்து இருக்கின்றனர் என அவர் கூறியுள்ளார்.