காவேரி வேளாண் மண்டலம் குறித்த சட்ட முன்வடிவை தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் தாக்கல் செய்தார்.
காவேரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும் என்ற அறிவிப்பை முதல்வர் தெரிவித்தார். இந்த அறிவிப்பை தொடர்ந்து நேற்று மாலையில் தமிழக அமைச்சரவை கூடி முடிவெடுத்து காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றக்கூடிய ஒரு மசோதாவை பேரவையில் கொண்டு வர நேற்றையதினம் முடிவெடுத்திருந்தார்கள்.
அதன் அடிப்படையில் இன்று காவிரி டெல்டா பகுதியில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றுவதற்கான அறிவிப்பு என்ற சட்ட முன்வடிவு தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. பல ஆண்டுகளாக இருந்துவந்த விவசாயிகளின் இந்த கோரிக்கை என்பது தற்போது சட்ட முடிவாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதனை நேரடியாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்தார்.