கார் தலைகுப்புற கவிழ்ந்த விபத்தில் 3 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பாரப்பாளையம் பகுதியில் சுகன்யா (29) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் நாமக்கல் மாவட்டத்தில் வசிக்கும் டாக்டர் பாலாஜி (30) என்பவருக்கும் கடந்த மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் பாலாஜி தனது மனைவி மற்றும் தம்பி வெங்கட்ராமணன் ஆகியோருடன் பாரப்பாளையம் பகுதியில் இருக்கும் தனது மாமனார் வீட்டுக்கு சென்றுள்ளார். இதனையடுத்து மாலை நேரத்தில் பாலாஜி தனது மனைவி, தம்பியுடன் காரில் தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
இவர்கள் சோளகாளிபாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி ஒரு சுவற்றில் மோதி தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 3 பேரும் அதிர்ஷ்டவசமாக லேசான காயத்துடன் உயிர் தப்பினர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.