Categories
டெக்னாலஜி

Airtel, Jio கட்டணம்……. பயனர்களுக்கு சற்றுமுன் வெளியான செய்தி…!!!!

இந்தியாவில் அக்டோபர் 1ம் தேதி முதல் 5ஜி அறிமுகம் செய்யப்படும் என்ற அறிவிப்பு நேற்று வெளியானது. ஆசியாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப கண்காட்சியான இந்திய மொபைல் காங்கிரஸ் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி 5ஜி சேவையை துவங்கி வைக்கிறார். 5ஜி சேவைக்கான அலைவரிசை ஏலம் அனைத்துமே முடிந்து விட்டது. பெரும்பாலான அலைவரிசையை வாங்கிய ஜியோ நிறுவனம் முதலிடத்திலும், ஏர்டெல் இரண்டாவது இடத்திலும் உள்ளது.

மேலும் குறைந்த விலையில் 5ஜி ஸ்மார்ட்போனை கொண்டு வருவதற்கான முழு முயற்சியில் ஜியோ நிறுவனம் களம் இறங்கியுள்ளது. இதனையடுத்து இந்நிலையில் ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்களின் 5ஜி சேவை கட்டணம் 4ஜி கட்டணத்தை விட கொஞ்சம்தான் கூடுதலாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த முறையான அறிவிப்பு அக்டோபர் முதல் வாரத்தில் வெளியாகும் என்றும், தீபாவளிக்கு அருகே 5ஜி சேவைகளை இரு நிறுவனங்களும் அறிமுகம் செய்யும் என கூறப்படுகிறது.

Categories

Tech |