எஸ்பிஐயில் மூத்த குடிமக்களுக்காகவே செயல்படும் ஸ்பெஷல் பிக்சட் டெபாசிட் திட்டம் SBI ‘WECARE’. இந்தத் திட்டம் ஆரம்பத்தில் செப்டம்பர் 2020 வரை மட்டுமே என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின் கொரோனா தொற்றும் காரணமாக சிறப்பு எப்டி திட்டமானது இது பலமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் தற்போது மீண்டும் வங்கி சார்பில் இந்த ஸ்பெஷல் பிக்சட் டெபாசிட் திட்டம் அடுத்த வருடம் மார்ச் இறுதிவரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. “SBI WECARE ” டெபாசிட் திட்டம் term deposit பிரிவில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. மேலும் இதில் 30 pbs கூடுதல் பிரிமியம் வழங்கப்படுகிறது. இது மூத்த குடிமக்களுக்கான டிடி செலுத்தப்படும்.
இந்த திட்டத்தில் ஐந்து வருடங்கள் மற்றும் அதற்கு மேல் தவணைக்காலம் மட்டுமே குறுகிய கால பிக்சட் டெபாசிட் திட்டத்தை தேடி அலைபவர்களுக்கு இந்த திட்டம் சிறந்ததாக இருக்கும். அதே போல் சேமிப்பு பணத்திற்கு மற்ற திட்டங்களை காட்டிலும் அதிக வட்டி வழங்கப்படுகிறது. “SBI WECARE”டெபாசிட் திட்டம் மார்ச் 31 2023 வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது என எஸ் பி ஐ தனது இணையதளத்தில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த திட்டத்தில் மூத்த குடிமக்களுக்கு 5 வருடங்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட காலத்திற்கான கூடுதல் 30 pbs வழங்குகிறது. தற்போது sbi போது பிரிவினருக்கு ஐந்து வருட பிக்சட் டெபாசிட் 5.65 % வட்டி விகிதத்தை வழங்கி வருகிறது. ஆனால் இதில் வட்டி சதவிகிதம் 6.45% ஆக இருக்கும். இதே போல கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் எஸ்பிஐ வங்கி மற்றொரு பிக்சட் சேமிப்பு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. உத்சவ் டெபாசிட் எனப்படும் இந்தத் திட்டத்தில் 6.1% விளங்குகிறது. இதில் 75 நாட்களுக்கான திட்டமாகும் மேலும் அக்டோபர் 30, 2022 வரை மட்டுமே இது செயல்பாட்டில் இருக்கும்.