மும்பையில் ஏராளமானோர் அதிகமான சொத்துக்களை வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தின் தலைநகரமாக மும்பை விளங்குகிறது. மேலும் மும்பை இந்தியாவின் மிகப்பெரிய நகரம் ஆகும். மேலும் நவி மும்பை மற்றும் தானே அருகில் உள்ள புறநகரங்களில் மட்டும் ஏறத்தாள 19 மில்லியன் மக்கள் வசித்து வருகின்றனர். மேலும் உள்நாட்டு உற்பத்தியில் மட்டும் 5 சதவீதமும், தொழில்துறை உற்பத்தியில் 25 சதவீதமும், இந்தியாவின் பொருளாதாரத்திற்கு கடல்வழி வாணிபத்தில் 40 விழுக்காடும், மூலதன பரிமாற்றத்தில் 70 சதவீதம் அளித்து இந்தியாவின் வணிக மையமாக மும்பை விளங்குகிறது.
மேலும் இங்கு இந்திய ரிசர்வ் வங்கி, மும்பை பங்குச்சந்தை, இந்திய தேசிய பங்கு சந்தை போன்ற முதன்மை நிதி அமைப்புகளுக்கு மையமாக விளங்குகிறது. இந்த நிலையில் இங்கு வசிக்கும் பெரும்பாலானோர் அதிக சொத்துக்களை வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில் 60 ஆயிரத்து 600 பேர் 10 லட்சம் டாலருக்கும் அதிகமான சொத்துகளை கொண்டுள்ளனர்.