பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படம் ரிலீஸ் ஆகி 25 வருடங்களை கடந்த நிலையில், இந்தியன் 2 திரைப்படத்தை இயக்குவதற்கு இயக்குனர் சங்கர் திட்டமிட்டுள்ளார். கடந்த 2018-ம் ஆண்டு இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், கொரோனா பரவல் மற்றும் சில பிரச்சனைகளின் காரணமாக படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டது. ஆனால் உலக நாயகன் கமல்ஹாசனின் முயற்சியின் காரணமாக மீண்டும் பூஜையுடன் இந்தியன் 2 திரைப்படம் தொடங்கியுள்ளது.
இந்த படத்தில் நடிகை காஜல் அகர்வால் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். நடிகை காஜல் அகர்வாலுக்கு குழந்தை பிறந்த பிறகு நடிக்கும் முதல் படம் இந்தியன் 2 என்பதால் அதற்கான தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். அந்த வகையில் இந்தியன் 2 படத்திற்காக சமீபத்தில் காஜல் அகர்வால் குதிரை சவாரி செய்திருந்தார். அது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலான நிலையில், தற்போது மீண்டும் ஒரு புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் நடிகை காஜல் அகர்வால் களரி பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
#Indian2 – @MsKajalAggarwal practicing Kalaripayattu for her portions in the film. The historical flashback episode is gonna be special!
— Siddarth Srinivas (@sidhuwrites) September 25, 2022