படகு மூழ்கி 23 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வங்கதேசத்தில் உள்ள பஞ்சவர் மாவட்டத்தில் ஒரு படகில் ஏராளமானோர் சென்றுள்ளனர். ஆனால் அந்த படகு திடீரென ஆற்றில் கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில் 23 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது. படகில் அதிக சுமை மற்றும் போதிய பாதுகாப்பு இல்லாமல் ஏராளமான சென்றுள்ளனர்.
இதனால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. அதில் 23 பேர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் மீதமுள்ளவர்களை தீவிரமாக தீயணைப்புத் துறையினர் தேடி வருகின்றனர் என கூறியுள்ளனர். இந்த சம்பவம் வங்கதேசத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.