இன்றைய தின நிகழ்வுகள்
1087 – இங்கிலாந்தின் மன்னராக இரண்டாம் வில்லியம் முடிசூடி 1100 ஆம் ஆண்டு வரை ஆட்சி புரிந்தான்.
1255 – அசிசியின் புனித கிலாராவுக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டது.
1371 – செர்பிய-துருக்கியப் போர்கள்: உதுமானிய சுல்தான் முதலாம் முராடின் படைகள் செர்பியப் படைகளுடன் மாரித்சா என்ற இடத்தில் போரில் ஈடுபட்டன.
1580 – சேர் பிரான்சிஸ் டிரேக் உலகைச் சுற்றி வந்தார்.
1687 – மாண்புமிகு புரட்சி: இங்கிலாந்து மீதான வில்லியமின் முற்றுகையை ஆம்ஸ்டர்டம் நகரசபை ஆதரித்து வாக்களித்தது.
1687 – ஏதென்சு நகரத்தை முற்றுகையிட்ட உதுமானியரிடம் இருந்து நகரைக் கைப்பற்ற மரோசினி தலைமையிலான வெனிசியப் படையினர் குண்டுத் தாக்குதலை நடத்தியதில் ஏத்தன்சின் பார்த்தினன் நகரம் பகுதியாக அழிந்தது.
1777 – அமெரிக்கப் புரட்சி: பிரித்தானியப் படைகள் பிலடெல்பியா நகரை முற்றுகையிட்டுக் கைப்பற்றின.
1799 – சூரிக்கில் அலெக்சாந்தர் கொர்சக்கோவ் தலைமையில் இடம்பெற்ற இரண்டாவது சமரில் ஆஸ்திரிய-உருசியப் படைகள் பிரான்சிய-சுவிட்சர்லாந்து படைகளிடம் தோற்றன.
1905 – ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் தனது சிறப்புச் சார்புக் கோட்பாடு தொடர்பான முதலாவது ஆய்வை வெளியிட்டார்.
1907 – நியூசிலாந்து, நியூபவுண்லாந்து இரண்டும் பிரித்தானியப் பேரரசின் டொமினியன்களாயின.
1918 – முதலாம் உலகப் போர்: அமெரிக்க வரலாற்றிலேயே அதிக இரத்தம் சிந்திய போர் மியூஸ்-ஆர்கன் தாக்குதல் பிரான்சில் ஆரம்பம். 1.2 மில்லியம் அமெரிக்கப் போர் வீரர்கள் பங்குபெற்றனர்.
1944 – இரண்டாம் உலகப் போர்: மார்கெட் கார்டன் நடவடிக்கை தோல்வியடைந்தது.
1950 – கொரியப் போர்: ஐநா ஐக்கிய நாடுகள் படைகள் வட கொரியாவிடமிருந்து சியோல் நகரை மீண்டும் கைப்பற்றின.
1953 – ஐக்கிய இராச்சியத்தில் சீனி மீதான பங்கீட்டு முறை நிறுத்தப்பட்டது.
1954 – சப்பானின் தொடருந்துப் படகு டோயா மாரு சூறாவளியில் சிக்கி மூழ்கியதில் 1,172 பேர் உயிரிழந்தனர்.
1959 – முதல் நாளில் சுடப்பட்டுப் படுகாயமடைந்த இலங்கைப் பிரதமர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா இறந்தார்.
1959 – சப்பானை சூறாவளி வேரா தாக்கியதில் 4,580 பேர் உயிரிழந்தனர், 1.6 மில்லியன் மக்கள் வீடுகளை இழந்தனர்.
1960 – ஐக்கிய அமெரிக்காவில் முதல் தடவையாக அரசுத்தலைவருக்காகப் போட்டியிடும் வேட்பாளர்களின் தொலைக்காட்சி நேரடி விவாதம் ரிச்சார்ட் நிக்சனுக்கும், ஜோன் எஃப். கென்னடிக்கும் இடையில் சிகாகோவில் இடம்பெற்றது.
1960 – பிடெல் காஸ்ட்ரோ சோவியத் ஒன்றியத்துக்கான தமது ஒத்துழைப்பை அறிவித்தார்.
1973 – அத்திலாந்திக் மேலான தனது முதலாவது இடைநிறுத்தல் இல்லாத பயணத்தை கொன்கோர்ட் விமானம் மிகக் குறைந்த நேரத்தில் பறந்து சாதனை நிலைநாட்டியது.
1980 – மியூனிக் நகரில் இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டனர், 211 பேர் காயமடைந்தனர்.
1983 – அணுவாயுதம் ஒன்று ஏவப்பட்டது என்ற அறிக்கை ஒரு கணினித் தவறு என்பதை சோவியத் இராணுவ அதிகாரி ஸ்டானிசுலாவ் பெத்ரோவ் கண்டுபிடித்து அணுவாயுதப் போரொன்று இடம்பெறுவதைத் தவிர்த்தார்.
1984 – ஐக்கிய இராச்சியம் ஆங்காங்கை சீனாவிடம் 1997 இல் கையளிக்க ஒப்புக் கொண்டது.
1987 – தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் லெப்டினன் கேணல் திலீபன் இந்திய அமைதிப் படையிடம் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து 12 நாட்கள் நீரும் அருந்தா உண்ணா நோன்பு இருந்து உயிர்துறந்தார்.
1997 – இந்தோனேசியாவின் கருடா விமானம் மேடான் அருகே விபத்துக்குள்ளாகியதில் 234 பேர் உயிரிழந்தனர்.
1997 – இத்தாலியில் இடம்பெற்ற நிலநடுக்கம் அசிசியின் பிரான்சிசு தேவாலயத்தின் ஒரு பகுதியைச் சேதப்படுத்தியது.
2002 – செனிகல் நாட்டு கப்பல் ஒன்று காம்பியாவில் மூழ்கியதில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
2007 – வியட்நாமில் பசாக் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுக்கொண்டிருந்த பாலம் ஒன்று இடிந்து விழுந்ததில் 60 தொழிலாளர்கள் உயிரிழந்தனர், நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர்.
2008 – சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த இவெசு ரொசி ஆங்கிலக் கால்வாயை ஜெட் இயந்திரம் பூட்டப்பட்ட இறக்கை மூலம் கடந்த முதலாவது மனிதர் என்ற சாதனை படைத்தார்.
2009 – பிலிப்பீன்சு, சீனா, வியட்நாம், கம்போடியா, லாவோஸ், தாய்லாந்து நாடுகளை கெத்சானா சூறாவளி தாக்கியதில் 700 பேர் உயிரிழந்தனர்.
இன்றைய தின பிறப்புகள்
1833 – சார்ல்ஸ் பிராட்லா, ஆங்கில அரசியல்வாதி (இ. 1891)
1849 – இவான் பாவ்லோவ், நோபல் பரிசு பெற்ற உருசிய மருத்துவர் (இ. 1936)
1867 – வின்சர் மெக்கே, அமெரிக்க இயங்குபடக் கலைஞர் (இ. 1934)
1876 – எடித் அப்போட், அமெரிக்க பொருளியலாளர், சமூக சேவையாளர் (இ. 1957)
1878 – பியதோசி நிகோலயேவிச் கிரசோவ்சுகி, உருசிய வானியலாளர் (இ. 1948)
1886 – ஆர்ச்சிபால்ட் ஹில், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய மருத்துவர் (இ. 1977)
1888 – தாமஸ் ஸ்டியன்ஸ் எலியட், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேயக் கவிஞர், எழுத்தாளர், திறனாய்வாளர் (இ. 1965)
1890 – பாபநாசம் சிவன், கருநாடக இசை அறிஞர் (இ. 1973)
1894 – ஜே. எல். பி. ரோச் விக்டோரியா, தமிழக அரசியல்வாதி, தொழிலதிபர் (இ. 1962)
1897 – ஆறாம் பவுல் (திருத்தந்தை) (இ. 1978)
1908 – பெரியசாமி தூரன், கருநாடக இசை அறிஞர் (இ. 1987)
1913 – திருக்குறள் வீ. முனிசாமி, தமிழறிஞர் (இ. 1994)
1923 – தேவ் ஆனந்த், இந்திய நடிகர், இயக்குநர் (இ. 2011)
1926 – துளசி கிரி, நேபாள பிரதமர் (இ. 2018)
1926 – வ. விஜயபாஸ்கரன், தமிழக இதழாசிரியர், எழுத்தாளர் (இ. 2011)
1932 – மன்மோகன் சிங், இந்தியாவின் 13வது பிரதமர்
1934 – ஏர்னெஸ்ட் மக்கின்டயர், இலங்கை-ஆத்திரேலியத் தமிழ் ஆங்கில நாடகாசிரியர்
1936 – வின்னி மண்டேலா, தென்னாப்பிரிக்க அரசியல்வாதி (இ. 2018)
1944 – தோப்பில் முகமது மீரான், தமிழக எழுத்தாளர் (இ. 2019)
1965 – பெத்ரோ பொரொசென்கோ, உக்ரைனின் 5வது அரசுத்தலைவர்
1966 – பூரி ஜெகன்நாத், இந்தியத் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர்
1979 – டாவி ரோயிவாசு, எசுத்தோனியாவின் 16வது பிரதமர்
1981 – செரீனா வில்லியம்ஸ், அமெரிக்க டென்னிசு வீராங்கனை
1985 – அபிசேக் ரகுராம், இந்திய கருநாடக இசைப் பாடகர்
1989 – சந்தியா, தென்னிந்திய நடிகை
இன்றைய தின இறப்புகள்
1915 – கீர் ஹார்டி, இசுக்கொட்டிய இடதுசாரி அரசியல்வாதி, தொழிற்சங்கவாதி (பி. 1856)
1922 – இலெவ் அலெக்சாண்ட்ரோவிக் சுகேவ், உருசிய வேதியியலாளர் (பி. 1873)
1954 – தேசிக விநாயகம்பிள்ளை, தமிழகக் கவிஞர் (பி. 1876)
1959 – எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா, இலங்கையின் 4வது பிரதமர் (இ. 1899)
1966 – சே. ப. இராமசுவாமி, இந்திய வழக்கறிஞர், அரசியல்வாதி, ஆளுநர் (பி. 1879)
1978 – மன்னே சீகுபான், நோபல் பரிசு பெற்ற சுவீடிய இயற்பியலாளர் (பி. 1886)
1987 – திலீபன், தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர் (பி. 1963)
2010 – குளோரியா ஸ்டுவர்ட், அமெரிக்க நடிகை (பி. 1910)
2014 – ஜெரால்டு ஜெர்ரி நியூகெபௌவேர், அமெரிக்க வானியலாளர், இயற்பியலாளர் (பி. 1932)
2019 – ஜாக் சிராக், பிரான்சின் 22வது அரசுத்தலைவர் (பி. 1932)
இன்றைய தின சிறப்பு நாள்
புரட்சி நாள் (யெமன்)