விமானத்தில் உயிரிழந்த மூதாட்டி உடன் பயணம் செய்த பயணிகள் நரகத்தை அனுபவித்ததாக அச்சத்துடன் கூறியுள்ளனர்
நடுவானில் சென்று கொண்டிருந்த விமானம் ஒன்றில் 83 வயது கொண்ட வயதான பெண் ஒருவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து விமானத்தில் பயணித்த செவிலியர் ஒருவர் மருத்துவ குழுவினரின் உதவியுடன் மூதாட்டிக்கு சிகிச்சை அளித்துள்ளார். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் மூதாட்டி. அவர் உயிரிழந்ததை தொடர்ந்து விமானத்தை தரையிறக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் சடலத்தை எடுத்து தனியாக வைக்கும்படியும் கூறியுள்ளனர். ஆனால் விமானத்தை தரையிறக்கும் செய்யாமல் சடலத்தை போர்வை போட்டு கூட மூடாமல் அப்படியே வைத்தனர். இதனால் பயணிகள் அனைவரும் அச்சத்துடன் சடலத்துடன் பயணம் செய்து வந்தனர்.
இதனையடுத்து விமானத்தில் பயணம் செய்த செவிலியராக நதாலி கூறுகையில் விமானத்தில் இருந்த ஊழியர்கள் யாருக்கும் அவசர நிலையை எப்படி கையாள்வது என தெரியவில்லை, இதற்கான பயிற்சியை அவர்கள் பெற்றிருக்க வேண்டும். சடலத்துடன் பயணம் செய்வது நரகத்தில் இருப்பது போல இருந்ததாக பயணிகள் அனைவரும் கூறியுள்ளனர். விமானம் தரையிறக்கப்பட்ட பின்னரும் சடலத்தை முதலில் இறக்காமல் பயணிகள் சடலத்தை கடந்தே இறங்கினர். இது தவறான விஷயம் ஆகும் எனக் கூறியுள்ளார்.
விமான செய்தியாளரிடம் இது குறித்து கேட்டபொழுது விமானத்தை உடனடியாக கீழே இறக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதாகவும். எந்த ஒரு கடினமான சூழ்நிலையை சமாளிக்கும் திறன் எங்கள் ஊழியர்களுக்கு உள்ளது எனவும் கூறியுள்ளார்.