புதுச்சேரி மாநிலத்தில் புதிய வைரஸ் காய்ச்சல் பரவியதையடுத்து ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு மாதம் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு இடையில் காலாண்டு தேர்வு தொடங்க உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே தெரிவித்திருந்தது. இந்த நிலையில் வைரஸ் காய்ச்சல் தொடர்ந்து பரவி வருவதால் பள்ளிகளுக்கு மீண்டும் விடுமுறை விடப்படுமா? என்று மக்களிடையே எதிர்பார்ப்பு நிலவி வந்தது. ஆனால் புதுவையில் இன்று ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து பேசிய அவர், காய்ச்சல் பரவலை தடுப்பதற்காக பள்ளிகளுக்கு ஒரு வாரம் விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகிறது. திட்டமிட்டபடி புதுவை மற்றும் காரைக்காலில் காலாண்டு தேர்வுகள் இன்று( தொடங்கும். இந்த தேர்வு முப்பதாம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவித்தார்.