Categories
உலக செய்திகள்

அட உண்மை தாங்க….! கர்ப்பம் என தெரிந்த “24 மணி நேரத்தில்” பிறந்த குழந்தை…. அதிர்ச்சியில் பெண்….!!!!!

பொதுவாகவே பெண்கள் கர்ப்பமாக இருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு தலை சுற்றல், வாந்தி, குமட்டல் போன்ற அறிகுறிகள் தென்படும். இந்த அறிகுறிகளை வைத்து அவர்கள் கர்ப்பமாக இருக்கிறார்கள் என்பதை அறிய முடியும். இதனையடுத்து மருத்துவரிடம் சென்று ஸ்கேன் பரிசோதனை செய்து குழந்தை வளர்ச்சியை கண்டுபிடித்து அதற்கு ஏற்ற உணவுகளை சாப்பிட்டு அவர்களும் ஆரோக்கியமாக இருப்பதால் குழந்தையும் ஆரோக்கியமாக வயிற்றில் வளரும். கிட்டத்தட்ட 5, 6 மாதங்களில் குழந்தை வயிற்றில் அங்கும் இங்கும் அசையும் நிகழ்வு நடைபெறும்.

ஆனால் பெண் ஒருவருக்கு இந்த எந்தவித அறிகுறிகளும் இல்லாமல் 24 மணி நேரத்தில் குழந்தை பிறந்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. ஆம் பிரிட்டனில் மோலி கில்பர்ட் என்ற பெண் தான் கர்ப்பமானது தெரியாமல் 36 வாரங்களாக எடை கூடுவதாக நினைத்து மருத்துவமனைக்கு சென்று வந்துள்ளார். மருத்துவர்களும் பல்வேறு சோதனைகள் செய்து பார்த்து அவரது உடலில் வேறு பிரச்சனைகள் இருப்பதாக மருந்து கொடுத்துள்ளனர். இறுதியில் சமீபத்தில் எடுத்த சோதனையில்தான் அவர் கர்ப்பமாக இருந்தது தெரிந்தது. தான் அன்றுதான் கர்ப்பமானதாக நினைத்த அவருக்கு, அதேநாளில் பிரசவ வலி ஏற்பட்டு குழந்தையும் பிறந்தது.

Categories

Tech |