சமீப காலமாக ஆன்லைன் பண மோசடிகள் அதிகரித்து வருகின்றன. இன்றைய காலகட்டத்தில் இந்தியா முழுவதும் பலரும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை மேற்கொள்ள ஆரம்பித்துவிட்டனர். இதனால் டிஜிட்டல் பணபரிவர்த்தனைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆன்லைன் மோசடிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மக்கள் தங்களுடைய பணத்தை இழந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
ஒருவேளை நீங்களோ (அ) உங்களுக்கு தெரிந்தவர்களோ ஆன்லைன் பண மோசடியில் சிக்கினால் உடனடியாக 1930 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் கொடுக்கலாம். வங்கி கணக்கில் இருந்து பணம் திருடப்பட்டிருந்தால் சம்பந்தப்பட்ட வங்கிக்கு தொடர்பு கொண்டு புகார் கொடுக்கலாம். மேலும், சைபர் கிரைமின் cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் தெரிவிக்கலாம்.