தமிழகத்தில் ஆயுத பூஜை. விஜயதசமி என தொடர் விடுமுறை காரணமாக சொந்த ஊருக்கு மக்கள் படையெடுத்து வருகிறார்கள். தமிழகத்தில் இந்த மாதம் முதல் பண்டிகை காலம் தொடங்குகிறது. இதனால் வெளியூர்களில் இருந்து மக்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு வருவது உண்டு. இவ்வாறு வரும் மக்கள் தங்களுடைய பயணத்திற்காக ரயில் மற்றும் பேருந்துகளை தேர்வு செய்வார்கள். குறிப்பாக ஆம்னி பேருந்துகளில் இரு மடங்காக கட்டணம் உயர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி ரயில் மற்றும் பேருந்துகளில் டிக்கெட் புக்கிங் நிரம்பி விட்டது.
இதனால், பேருந்து, இரயில்களில் டிக்கெட் கிடைக்காத பயணிகள் விமான பயணங்களை மேற்கொள்கின்றனர். ஆனால், சென்னையில் இருந்து திருச்சி, கோவை, திருவனந்தபுரம், பெங்களூர் போன்ற இடங்களுக்கு செல்லும் உள்நாட்டு விமான கட்டணம் திடீரென உயர்ந்துள்ளது. இதனால், பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.