மாதந்தோறும் முதியோர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை திமுக அரசு ரத்து செய்துள்ளதாக வெளியான தகவல் ஏழை எளிய முதியோரை கடும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், 60 வயதுக்கு மேற்பட்ட ஏழை எளிய முதியோருக்கு மாதந்தோறும் 1500 ரூபாய் ஓய்வூதியமாக வழங்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் கூறியிருந்த நிலையில் தற்போது ஆட்சிக்கு வந்து 16 மாதங்கள் கடந்த நிலையிலும் இந்த வாக்குறுதி நிறைவேற்றாதது மட்டுமல்லாமல் பயனாளிகளுடைய எண்ணிக்கை தற்போது குறைத்துள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
இதை பார்க்கும் பொழுது “கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனது” என்ற பழமொழி தான் பொதுமக்கள் உடைய நினைவுக்கு வருகிறது. இது திமுக அரசுக்கு வாக்களித்த மக்களை வஞ்சிக்கும் செயலாகும். ஆனால் இது குறித்து அதிகாரிகள் கூறுகையில் முதியோர் ஓய்வூதியம் பெறுபவர்களின் ஆதார் எண் அடிப்படையில் நகைக்கடன் போன்ற விவரங்களை முதியோர் ஓய்வூதியம் பெறுவோர் பட்டியலோடு ஒப்பிட்டு பார்த்து அளிக்கப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் இலட்சக்கணக்கான முதியோர்களின் ஓய்வு ஊதியத்தை தமிழக அரசு நிறுத்தி உள்ளது என்று தெரிவித்துள்ளது.