Categories
தேசிய செய்திகள்

பெற்றோர்களே உஷார்…! 5 செமீ பொருள் 15 செமீ ஆழத்தில்…. குழந்தையின் தொண்டைக்குள்…. அதிர்ச்சி சம்பவம்….!!!!!

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் என்ற பகுதியைச் சேர்ந்த தம்பதிகள் ஒருவருக்கு எட்டு மாத ஆண் குழந்தை ஒன்று இருந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று குழந்தை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக வீட்டில் இருந்த ஐந்து சென்டிமீட்டர் அளவிலான நகவெட்டி ஒன்றை குழந்தை விழுங்கி உள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அப்போது எக்ஸ்ரே எடுத்துப் பார்த்த மருத்துவர்கள் நகவெட்டி சுமார் 15 சென்டிமீட்டர் நீளத்தில் சிக்கியதை கண்டுபிடித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து மருத்துவர்கள் அதை வெற்றிகரமாக நீக்கியுள்ளார்கள். இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், பதினைந்து சென்டிமீட்டர் ஆழத்திலிருந்து நகவெட்டி வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மூலம் எடுத்துள்ளோம். தற்போது குழந்தை நலமாக இருக்கிறது.

குழந்தைகளிடம் இது போன்ற ஆயுதங்களை பெற்றோர்கள் தள்ளி வைக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினாலும் பெற்றோர்கள் அதை கருத்தில் கொள்ளாமல் இருப்பதால் இது போன்ற ஆபத்தான விளைவுகள் ஏற்படுகிறது என்று கூறியுள்ளனர். எனவே பெற்றோர்கள் வீட்டில் குழந்தைகள் இருந்தால் இது போன்று ஆபத்து விளைவிக்க கூடிய பொருட்களை எட்டாத உயரத்தில் வைக்க வேண்டும்.

Categories

Tech |