Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“4 போலீஸ் தான்” ஊருக்குள்ள பிரச்சனை இருக்கு….. தீர்த்து வைக்க ஆளில்லை….. காலிப்பணியிடங்களை நிரப்ப கோரிக்கை….!!

வேலூர் அருகே மகளிர் காவல்நிலையத்தில் போதிய காவல் அதிகாரிகள் இல்லாததால் வழக்கு விசாரணை நடத்த திணறி வருகின்றனர்.

வேலூர் தெற்கு காவல் நிலையம் அருகே அனைத்து மகளிர் காவல் நிலையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. சுமார் 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் இந்த காவல் நிலையத்தின் கீழ் கட்டுப்பாட்டில் உள்ளன.  இந்த கிராமங்களில் இருந்து சுமார் சராசரியாக ஒரு நாளைக்கு 7 வழக்குகள் நாள்தோறும் விசாரணைக்கு வருகின்றனர்.

சுமார் 10க்கும் மேற்பட்ட சப்-இன்ஸ்பெக்டர், இன்ஸ்பெக்டர், எழுத்தர் என 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இருக்க  வேண்டிய காவல் நிலையத்தில், இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் என நான்கு காவல் அதிகாரிகள் மட்டுமே இருப்பதால் வரும் பெண்கள், குழந்தைகள், பாலியல் உள்ளிட்ட வழக்குகளை நேரில் சென்று விசாரிக்க முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர்.

ஆகையால் அங்கு இருக்கும் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று ஊர் மக்கள் சார்பிலும், காவல்துறை அதிகாரிகள் சார்பிலும் தமிழக அரசிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |