ஒரே அலுவலகத்தில் மூன்று வருடங்களுக்கு மேல் பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் பணியாளர்களை மாற்றம் செய்ய நாளை முதல் கலந்தாய்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வி ஆணையரக இணை இயக்குனர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், எந்தவித புகாருக்கும் இடம் இல்லாமல் அனைத்து அலுவலகங்களும் செயல்பட வேண்டும். கடந்த ஜூன் 1ஆம் தேதி நிலவரப்படி மூன்று வருடங்களுக்கு மேல் பணிபுரியும் கண்காணிப்பாளர்கள், உதவியாளர்கள் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள், இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்கள் ஆகியோருக்கு முதன்மை கல்வி அலுவலர் அளவில் கலந்தாய்வு நடத்தப்படும்.
அதன்படி நிதி காப்பாளர், மாவட்ட கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர், கண்காணிப்பாளர் பதவி உயர்த்தபட்ட கண்காணிப்பாளர் ஆகியோருக்கு மாவட்டத்திற்குள் மாறுதல் பெற கலந்தாய்வு நாளையும், நேர்முக உதவியாளர், கண்காணிப்பாளர் மற்றும் பதவி உயர்த்தபட்ட கண்காணிப்பாளர் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் பெறுவதற்கு 28ஆம் தேதி கலந்தாய்வு நடத்தப்படும். பதவி உயர்வுக்கான கலந்தாய்வு 29ஆம் தேதி நடக்கும் என்று தெரிவித்துள்ளது.