தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் தற்போது திறக்கப்பட்டு மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு திட்டமிட்டபடி நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் அரசு பள்ளிகளில் கல்வி கற்பித்தல், தேர்வு நடத்துதல், ஆசிரியர்கள் நியமித்தல் உள்ளிட்டவற்றில் பல்வேறு மாற்றங்களை பள்ளிக்கல்வித்துறை அவ்வப்போது செய்து வருகிறது. அதன்படி அரசு பள்ளியில் நான்கு முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த வருடம் இருந்து முதல் பருவ தேர்வுக்கு பதில் தொகுத்தறியும் திறன் தேர்வு நடக்கிறது.
மாநில அளவில் ஒரே வினாத்தாள் அடிப்படையில் பொதுத்தேர்வுக்கு இணையாக இந்த தேர்வு நடத்தப்படுகிறது. ஒருங்கிணைந்த கல்வித் திட்ட இயக்குனரகம் சார்பாக ஆசிரியர்களின் செல்போன் செயலி வழியாக இந்த தொகுத்தறிதல் தேர்வு நடைபெறுகிறது. இன்று முதல் மூன்று நாட்களுக்கு இந்த தேர்வு கண்காணிப்பில் ஆசிரியர்கள் தனியாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்