செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இப்பொழுது மிக முக்கியமான விஷயமாக நான் பேசிக் கொண்டிருப்பது நீலகிரி தொகுதியினுடைய மக்கள் பிரதிநிதி எம்.பி அண்ணன் ஆ. ராசா அவர்களுடைய பேச்சு இப்பொழுது மிகப்பெரிய சர்ச்சைக்கு உண்டாகி அனைத்து இடத்தில் மக்கள் தங்களுடைய கோபத்தை காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
அதுவும் அவருடைய சொந்த தொகுதி நீலகிரி மாவட்டத்தில் குறிப்பா ஊட்டி, கூடலூர் அனைத்து பகுதிகளிலும் கூட கிட்டத்தட்ட 90% மக்கள் தங்களுடைய கோபத்தை எப்படி வெளிப்படுத்தினார்கள் என்றால் முழு கடையடைப்பு, முழு பந்த். அவருடைய சொந்த தொகுதியிலே மக்கள் கிட்டத்தட்ட அனைத்து மதங்களையும் சார்ந்த மக்கள் தங்களுடைய கடையை அடைத்து தங்களுடைய கோபத்தை அங்கே வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
தமிழகம் முழுவதுமே ஆங்காங்கே பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்து மதத்தை சார்ந்தவர்கள் மட்டுமில்லாமல், நம்முடைய சமூக வலைதளம் மற்றும் மீடியாவில் இஸ்லாம் மதத்தை சார்ந்தவர்கள், கிறிஸ்துவ மதத்தை சார்ந்தவர்கள், அங்கு இருக்கும் பெரியவர்கள் கூட அந்தக் கருத்தை கண்டித்து இருக்கிறார்கள். ஆனால் உண்மையை சொல்ல வேண்டுமென்றால், தமிழகத்தில் இது ஒன்றும் புதிது கிடையாது. இரண்டு வருடத்திற்கு ஒருமுறை இது போன்ற சர்ச்சை பேச்சு, வருடத்திற்கு ஒரு முறை சிறு சிறு தலைவர்கள் திமுகவில் இதைப் போன்று பேசுவது..
தமிழகம் இதை 70 ஆண்டு காலமாக பார்த்துக் கொண்டிருக்கிறது. ஆனால் ஒரு, ஒரு முறையும் ஏன் பேசுகிறார்கள் ? என்பது தான் கேள்வி. ஒரு ஒரு முறையும் ஏன் பேச வேண்டும் ? எதற்காக ஹிந்து சனாதானதர்மம் என்ற வார்த்தை இங்கே கொண்டுவந்து, அதனுடைய அர்த்தத்தை எல்லாம் திரித்து, அது ஏதோ ஆகாத ஒரு வார்த்தையை போல் இங்கே பிரச்சாரத்தை மேற்கொண்டு, அதன் மூலமாக மக்களுடைய வெறுப்பை இவர்களே சம்பாதித்துக் கொண்டிருக்கின்றார்கள் என தெரிவித்தார்.