பள்ளிக்கு சென்ற சிறுவனின் புத்தகப் பையில் பாம்பு இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
மத்தியபிரதேசம் மாநிலம் தாடிய மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வரும் சிறுவன் வழக்கம்போல் பள்ளிக்கு சென்றுள்ளான். இந்நிலையில் சிறுவன் புத்தகப் பையைத் திறக்கும்போது உள்ளே இருந்து ஏதோ சத்தம் கேட்டுள்ளது. இதனால் சிறுவன் புத்தகப் பையில் ஏதோ இருப்பதாக ஆசிரியரிடம் தெரிவித்துள்ளான்.
அதனை தொடர்ந்து மாணவனின் புத்தகப் பையைத் திறந்து பார்த்தபோது, அதிலிருந்து பாம்பு ஒன்று வெளியே வந்து புதருக்குள் சென்றுவிட்டது. இந்த சம்பவம் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.