Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

ஆட்டை இழுத்து சென்ற விலங்கு…. அச்சத்தில் கிராம மக்கள்…. வனத்துறையினருக்கு விடுத்த கோரிக்கை….!!!

சிறுத்தை அட்டகாசம் செய்வதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த வனவிலங்குகள் இரை மற்றும் தண்ணீரை தேடி ஊருக்குள் நுழைந்து விளை நிலங்களை நாசம் செய்கிறது. இந்நிலையில் கல்லப்பாடி தோனிக்கான் பட்டியில் கணபதி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் ஊருக்குள் நுழைந்த சிறுத்தை ஆட்டை கவ்வி இழுத்து சென்றது. இதனை அடுத்து ஆட்டின் அலறல் சுத்தம் கேட்டு ஓடி வந்த குடும்பத்தினர் சிறுத்தை நின்றதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டனர்.

இதனால் ஆட்டை விட்டு விட்டு அங்கிருந்து சிறுத்தை ஓடியது. இதுகுறித்து அறிந்த கால்நடை மருத்துவர்கள் ஆட்டுக்கு சிகிச்சை அளித்தனர். ஆனாலும் நேற்று ஆடு பரிதாபமாக உயிரிழந்தது. கடந்த வாரம் இதே பகுதியில் முனிரத்தினம் என்பவர் வளர்த்து வந்த நாயை சிறுத்தைகள் கடித்துக் கொன்றது குறிப்பிடத்தக்கதாகும். தொடர்ந்து சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் கிராம மக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். எனவே அட்டகாசம் செய்யும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |