தமிழகத்தில் 4 ஐபிஎஸ்அதிகாரிகளுக்கு ஏடிஜிபியாக பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
டேவிட்சன் தேவாசீர்வாதம், சந்தீப் மிட்டல், பால நாகதேவி மற்றும் எஸ்.என் சேஷசாயி இந்த நான்கு அதிகாரிகளும் 1995 ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு தற்போது பதவி உயர்வு வழங்கப்படுகிறது. பதவி உயர்வு வழங்கப்பட்டு இருக்கும் சூழ்நிலையில் அவர்களுக்கு புதிதாக பணி இடங்களும் ஒதுக்கப்படும். அடுத்த கட்டமாக பணியிடங்கள் தொடர்பான அறிவிப்பு வெளியாக இருக்கிறது.
இதில் டேவிட்சன் தேவாசீர்வாதம் மதுரையில் காவல்துறை ஆணையராக இருக்கிறார். எஸ்.என் சேஷசாயி தமிழக காவல்துறை தலைமையகத்தில் பணி புரிகின்றார்.