வேலூர் மாவட்டம் அருகே குடிபோதையில் குடிசையை எரித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
வேலூர் மாவட்டம் பனையபுரம் பகுதியை அடுத்த பாலகிருஷ்ணாபுரம் தெருவை சேர்ந்தவர் ரமேஷ். இவர் அதே பகுதியில் கூலித் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். மேலும் அதே தெருவைச் சேர்ந்த சரவணன் என்பவருக்கும், ரமேஷுக்கும் இடையே நீண்டகாலமாக முன்விரோதம் இருந்து வருகிறது.
இதன் காரணமாக நேற்று குடிபோதையில் இருந்த மது அருந்திவிட்டு போதை தலைக்கேறிய நிலையில், ரமேஷ் தங்கியிருக்கும் குடிசை வீட்டில் தீ வைத்தார். இதில் மளமளவென பற்றி எரிந்தது. இந்நிலையில் அருகிலுள்ள ஆறுமுகம் என்பவரது வீட்டிலும் சேர்ந்து எரிந்தது. இதில் இரண்டு வீடுகளும் எரிந்து அதிலுள்ள பொருட்கள் கருகி நாசம் ஆயின. பின் சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் தீயை அணைத்தனர். மேலும் சரவணன் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.