கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்த இளம் பெண்ணை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கோட்டூர் பகுதியில் 28 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான இளம்பெண்ணுக்கு பல இடங்களில் சிகிச்சை பெற்று குழந்தை பிறக்கவில்லை. இந்நிலையில் மிஸ்டு கால் மூலமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இளம்பண்ணுக்கு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இதனை அடுத்து தனது கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் இளம்பெண் அந்த வாலிபரை வரவழைத்து உல்லாசமாக இருந்துள்ளார். இதுகுறித்து அறிந்த இளம் பெண்ணின் கணவர் தனது மனைவியிடம் கேட்டபோது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பே இளம்பெண் தனது கணவரை விட்டு பிரிந்து பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். சம்பவம் நடைபெற்ற அன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இளம்பெண் கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மகளை பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து இளம்பெண்ணின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் இளம்பெண்ணை தீவிரமாக தேடி வருகின்றனர்.