Categories
மாநில செய்திகள்

“நான் வாங்கிய கைக்கடிகாரம்” பாமக நிறுவனர் ராமதாஸின் பேஸ்புக் பதிவு…. இணையத்தில் செம டிரெண்டிங்….!!!!

பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ். இவர்  வெளியிடும் அறிக்கைகள் தமிழக அரசியலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் வெறும் அறிக்கைகளாக மட்டுமின்றி தமிழகத்தில் நிலவும் ஒரு குறிப்பிட்ட பிரச்சினையை மையப்படுத்தி பல்வேறு தகவல்களை வெளியிட்டு இருப்பார். அதுமட்டுமின்றி பேஸ்புக் மற்றும் டிவிட்டர் போன்ற சமூக வலைதளங்களிலும் பல்வேறு விதமான கருத்துக்களை பதிவிட்டு எப்போதும் ஆக்டிவாக இருப்பார். இவர் கட்சி மற்றும் நாட்டில் நடக்கும் பிரச்சினைகள் மட்டுமின்றி தன்னுடைய வாழ்வில் நடக்கும் சில சுவாரசியமான தகவல்களையும் சமூக வலைதளங்களில் வெளியிடுவார். அந்த வகையில் ஒரு பேஸ்புக் பதிவை தற்போது வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ஏவிஎம் ராஜேஸ்வரி அரங்கத்தில் ஒரு விழா நடைபெற்றது.

அதாவது சமூகத்தின் பல்வேறு பிரச்சினைகளுக்காகவும், எனக்காகவும் வாதிட்ட வழக்கறிஞர் ஜி. மாசிலாமணி அவர்களின் முத்து விழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட பிறகு நான் எனக்கு ஒரு வாட்ச் வாங்குவதற்காக ஒரு வாட்ச் ஷோரூமுக்கு சென்றேன். அந்தக் கடைக்காரர் என்னிடம் 10,000 ரூபாய் மதிப்புள்ள வாட்சை காட்டினார். நான் அவரிடம் இதை விட குறைவாக 2000 அல்லது 3000 ரூபாயில் வாட்ச் இல்லையா என்று கேட்டேன். அதற்கு கடைக்காரர் இந்த வாட்ச் உங்கள் கைகளுக்கு மிகவும் அழகாக இருக்கும் என்று கூறினார். இதனால் கடைக்காரரின் விருப்பப்படியே 10,000 ரூபாய் மதிப்புள்ள வாட்சை வாங்கினேன். அந்த வாட்சை கடைக்காரர் என்னுடைய கையில் கட்டி விட்டார். அதன்பின் நான் மகிழ்ச்சியாக வீட்டிற்கு திரும்பினேன் என்று பதிவிட்டுள்ளார். மேலும் இந்த பதிவுக்கு ஏராளமான லைக்ஸ் மற்றும் ஆயிரக்கணக்கான கமெண்ட்கள் குவிந்து வருகிறது.

Categories

Tech |