Categories
அரசியல் மாநில செய்திகள்

நான் ரெடி!… நீங்க ரெடியா?…. நிதியமைச்சருக்கு சவால் விடும் செல்லூர் ராஜூ….!!!!!

முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க-வின் இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் வருகிற 29ம் தேதி மதுரையில் பொதுக் கூட்டம் நடத்தப்படவுள்ளது. இந்த பொதுக் கூட்டத்துக்கான முன்னேற்பாட்டு பணிகள் பற்றிய ஆலோசனைக் கூட்டத்தில், முன்னாள் அமைச்சரும், மதுரை தெற்கு மாவட்ட சட்டப் பேரவை உறுப்பினருமான செல்லூர் கே.ராஜூ கலந்துகொண்டார்.

அந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் செல்லூர் கே.ராஜூ செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது “கடந்த ஆட்சியில் கூட்டுறவுத்துறையில் ரூ.15 ஆயிரம் கோடி அளவில் ஊழல் நடைபெற்றதாக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சொல்லிய குற்றச்சாட்டு, நிரூபிக்கப்பட்டால் நான் அரசியலிலிருந்து கண்டிப்பாக விலகதயார். அவ்வாறு முறைக்கேடு நிரூபிக்கப்படவில்லை எனில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அரசியலிலிருந்து விலகிகொள்ள தயாரா..?” என கேள்வி எழுப்பினார்.

மேலும் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் பரிந்துரையில் நகைக் கடன், பயிர்க் கடன் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், எப்படி தகுதி இல்லாதவர்களுக்கு தள்ளுபடி செய்ய இயலும். அ.தி.மு.க ஆட்சியில் கலங்கம் இன்றி கூட்டுறவுத்துறை செயல்பட்டுள்ளது. கூட்டுறவுத் துறையில் சிறப்பாக செயல்பட்டமைக்கு அ.தி.மு.க ஆட்சியில் மத்திய அரசு வழங்கிய 27 விருதுகளை தமிழக அரசு சார்பில் நாங்கள் பெற்றுள்ளோம்” என்று கூறினார்.

Categories

Tech |