Categories
மாநில செய்திகள்

வடகிழக்கு பருவமழை…. “அனைத்து துறையும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்”…. முதல்வர் ஸ்டாலின்..!!

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது தொடர்பாக பல்வேறுதுறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரியுடன் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்..

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது தொடர்பாக பல்வேறுதுறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரியுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், பருவமழையை எதிர்கொள்ள போர்க்கால அடிப்படையில் நீங்கள் முனைப்போடு செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். ஏற்கனவே தொடக்கத்தில் சொன்னது போலவே ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர்களும், மானிட்டரிங் அலுவலர்கள் மழைக்காலத்திற்கு முன்பே ஓரிருமுறை தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு சென்று அதை பார்வையிட வேண்டும். அந்த மாவட்டத்தில் தங்கி பள்ளி கட்டடங்கள் மற்றும் நிவாரண மையங்களை ஆய்வு செய்யுங்கள்.

இதில் குறிப்பாக பள்ளிக்கூட கட்டடங்களில் நீங்கள் கூடுதலாக கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். கடந்த ஆண்டு நாம் சந்தித்த இடர்பாடுகளின் அடிப்படையில் பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றி உள்ளோம். முக்கிய கால்வாய்களில் தூர்வாரும் பணிகளை மேற்கொண்டோம். இதன் மூலமாக இந்த முறை சென்னை நகரில் முக்கிய பகுதிகளில் மழைதேங்காது என்று நான் ஓரளவிற்கு நம்புகிறேன், எதிர்பார்க்கிறேன்.

அதை வேளையில் தேங்காது என்று நீங்கள் மெத்தனமாக இருக்கக் கூடாது. மழை காலத்தில் பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளை சேர்ந்த அலுவலர்களும், வருவாய் துறை, பொதுப்பணித்துறை, தீயணைப்பு துறை, வேளாண் துறை என பல்வேறு துறைகளும் தனித்தனியாக இயங்காமல் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். அரசு துறையுடன் சேர்ந்து மக்களும் ஒருங்கிணைந்து செயல்படக்கூடிய சூழலை நீங்கள் உருவாக்க வேண்டும். ஒவ்வொரு பகுதியில் இருக்கக்கூடிய குடியிருப்பு சங்கங்கள் மற்றும் அந்த பகுதி மக்களுடன் இணைந்து முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையை மேற்கொண்டால் அது நல்ல பலன் கிடைக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன்” என்று தெரிவித்தார்..

 

Categories

Tech |