திமுக சார்பில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, அரசு பள்ளியில் படிச்சிட்டு காலேஜுக்கு போற பெண்கள் எல்லாம் எவ்வளவு மகிழ்ச்சியா தலையாட்டுறீங்க பாருங்க… உங்க பொண்ணுங்க எல்லாம் காலேஜ் போகணும்… உங்க சகோதரிகள் காலேஜுக்கு போகணும்…. அவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய்…. இங்க இருக்கிற பொண்ணுங்க யாருன்னா பக்கத்துல இருக்குற பாரதி காலேஜுக்கு போகணும்னு அவனுங்க அம்மா கிட்ட பத்து ரூபா இருந்தா குடும்மா கேட்குமா ? கேட்காதா ? இனிமே உங்ககிட்ட கேக்க மாட்டாங்க.
இனிமே நீங்கதான் அவங்ககிட்ட போயி, தமிழக முதலமைச்சர் தளபதி ஸ்டாலின் இருக்காரே அவர் கொடுத்த ஆயிரம் ரூபாய் வாங்கிட்டியா ? அதுல ஒரு நூறு ரூபா இருந்தா கூடுன்னு கேப்பீங்களா ? கேட்க மாட்டீங்களா? வீட்டுக்காரரிடம் கேட்க மாட்டீங்க… பொண்ணு கிட்ட காசு இருந்தா விடுவிங்களா ? அதுதாண்டா எங்க தமிழக முதல்வர் தளபதி அவர்கள் செய்திருக்கின்ற சாதனை.
மகளிர் படிக்க வேண்டும் என்பது மட்டுமல்ல, அவர்கள் உயர் கல்வி பெற வேண்டும் என்பதற்காகவும் செய்து கொண்டிருக்கிற ஒரு சாதனையாளர் தான் நம்முடைய தமிழக முதல்வர். அதுதான் திராவிட மாடல். அண்ணாமலை இதெல்லாம் தெரிஞ்சுக்கடா யப்பா..
இதெல்லாம் புரிந்து கொள்ள வேண்டும். பழைய வரலாற்றை மட்டுமல்ல, நடக்கின்ற வரலாற்றையும் நீ தெரிந்து கொண்டு பேசு. இவர் சொல்றாரு, புதுக்கல்வி கொள்கை. அதுதான் நம்முடைய நாஞ்சில் சம்பத் அவர்கள் சொன்னாரு… அண்ணா காலத்தில தான் இரு மொழிக் கொள்கை கொண்டு வர வேண்டும் என்று சொன்னார் என தெரிவித்தார்.