இந்தியாவில் மின்னணு வர்த்தகம் மேகமாக வளர்ந்து கொண்டு வருகிறது. மொபைல், ஸ்மார்ட் வாட்ச், டிவி, எலக்ட்ரானிக் பொருட்கள், ஆடைகள் என பல வகையான பொருட்களை வாங்குவதற்கு நிறைய பேர் பண்டிகை காலம் சிறப்பு சலுகையை எதிர்நோக்கி இருக்கிறார்கள். அதிலும் தீபாவளி பண்டிகை நேரத்தில் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் தள்ளுபடி விற்பனையில் சிறப்பு சலுகை அறிவிப்பது வழக்கம். அதன்படி தற்போது வளர்ந்து வரும் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனமான மீஷோ சிறப்பு சலுகை திட்டத்தை அறிவித்துள்ளது. மிகப்பெரிய சேல், மிகப்பெரிய டமாக்கா என்ற பெயரில் 5 நாட்கள் மெகா பிளாக் பஸ்டர் விற்பனையை மீஷோ நிறுவனம் தொடங்கியுள்ளது.
இந்த சலுகையில் வாடிக்கையாளர்கள் நம்ப முடியாத வகையில் 80% தள்ளுபடி கிடைக்கிறது. வாடிக்கையாளர்கள் செய்யும் ஆர்டரில் ரூ.50 வரை கூடுதல் தள்ளுபடி கிடைக்கிறது. கேஷ் ஆன் டெலிவரி, இலவச டெலிவரி, எளிதான ரிட்டன்ஸ் போன்ற அம்சங்களும் இந்த சலுகையில் உள்ளது. மீஷோவின் இந்த சிறப்பு சலுகை செப்டம்பர் 23 முதல் 27 வரை மட்டுமே உள்ளது. சலுகை காலம் முடிய இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ளதால் அதற்குள் வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். தீபாவளி பண்டிகைக்கு முன்பாக அமேசான், flipkart, மிந்த்ரா உள்ளிட்ட நிறுவனங்களும் ஆன்லைன் ஷாப்பிங் நிறைய சலுகைகளை அறிவித்து வருகிறது. இந்நிலையில் மீஷோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது.