திருவள்ளுவர் அருகே அத்தையை பலாத்காரம் செய்த வாலிபர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி பகுதியையடுத்த பூங்கா தெருவில் வசித்து வந்த ஆட்டோ டிரைவர் ராஜேஷ். இவர் சில நாட்களுக்கு முன்பு மர்ம நபர்களால் அடித்து கொலை செய்யப்பட்டு அதே பகுதியில் உள்ள கறிக்கடை ஒன்றின் முன்பு வீசப்பட்டு கிடந்தார். இதையடுத்து கொலை குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதில்,
ராஜேஷ் என்பவரின் தாய்மாமன்களான குணசேகரன் முனியப்பன் ஆகியோருக்கு தொடர்பு இருந்தது தெரியவந்ததையடுத்து, அவர்கள் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொள்கையில் பரபரப்பு வாக்குமூலம் ஒன்றை தெரிவித்தனர். அதில்,
குணசேகரன் என்பவரிடம் விசாரிக்கையில், ராஜேஷ் எனது அக்காள் பையன் எனது மனைவிக்கு மனம் நலம் பாதிக்கப்பட்டதால் அவரை சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்து செல்வதற்காக எனது அக்கா வீட்டில் நாங்கள் இருவரும் தங்கியிருந்தோம். அங்கு நானும் வெளியில் செல்ல எனது அக்காவும் அருகில் உள்ள கடைக்கு சென்று இருந்தார்.
அப்போது குடிபோதையில் வந்த ராஜேஷ் அத்தை என்றும் பாராமல் என் மனைவியை பலாத்காரம் செய்தார். இதனை என் அக்காள் நேரில் கண்டதும் அவனை பிடித்து கண்டித்துள்ளார். அப்போது நானும் அங்கே வந்த பின் நடந்தவற்றை தெரிந்து கொண்டேன். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தால் எனது தம்பி முனியப்பன் உடன் சேர்ந்து ராஜேஷை கொலை செய்து விட்டு தப்பி ஓடி விட்டோம் என்று தெரிவித்தனர். இந்நிலையில் காவல்துறையினர் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.