இந்தி சினிமாவில் நடிகையாக வலம் வந்து, பின் அரசியல்வாதியான ஹேமா மாலினி மதுரா நாடாளுமன்ற தொகுதியிலிருந்து பா.ஜ.க-வின் சார்பாக இருமுறை எம்பி ஆக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார். இந்நிலையில் இத்தொகுதியிலிருந்து நடிகை கங்கனா ரணாவத் போட்டியிடகூடும் என பரவிய தகவல்களுக்கு ஹேமா மாலினி பதில் அளித்தார். அதாவது நடிகை ராக்கிசாவந்த் கூட நாளை வரலாம் என்று அவர் கூறினார். இதற்கு ராக்கி சாவந்த் பதிலளித்து பேசியதாவது, பிரதமர் மோடி ஜி மற்றும் ஹேமா மாலினிக்கு என் நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன். என் தோள்களில் பெரிய பொறுப்பை வைத்ததற்காகவும், இதற்கு தகுதியானநபர் என என்னை கவனத்தில் கொண்டதற்காகவும் மோடிஜிக்கு நன்றி.
ஹேமா மாலினி முன்னதாக அறிவித்தது போன்று, தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு வழங்கியதற்காக நன்றி தெரிவித்துகொள்கிறேன் என சாவந்த் கூறியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது, சிறுவயதில் இருந்தே சமூகத்திற்காக நான் சேவைசெய்து வருகிறேன். நாட்டிற்கு சேவை செய்வதற்கே நான் பிறந்தேன். நமது பிரதமர், தேநீர் தயாரிப்பவராக இருந்து பிரதமராக முடியும் போது, பாலிவுட்டில் பணிபுரிந்துவிட்டு நான் ஏன் ஒரு முதல்-மந்திரியாக முடியாது..? ஆகவே கண்டிப்பாக என்னால் முடியும். இதற்காக உங்கள் அனைவரது ஆசிர்வாதமும் தேவையாக இருக்கிறது என சாவந்த் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக 2024 தேர்தலில் நான் போட்டியிடுவேன். எனினும் அது யாருக்கு எதிராக என்பது எதிர்பாராத ஒன்றாக இருக்கும் என அவர் கூறியுள்ளார்.