நச்சு அரசியல் சக்திகளுக்கு இடமளிக்கும் பேச்சுகளை தவிர்க்குமாறு திமுக தலைவரும் முதல் வருமான மு க ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மக்களுக்கான பணியை கவனிப்போம் என்று திமுக தொண்டர்களுக்கு மு க ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டு அறிவுறுத்தி இருக்கிறார். இந்த நேரத்துல வெளியாகி இருக்கும் அறிக்கை முக்கியமானதாக பார்க்கப்படுகின்றது. கட்சியின் மூத்த தலைவர்கள், அமைச்சர்கள் பொதுவெளியில் பேசுவது, பொதுவெளியில் நடந்து கொள்வது நிறைய சர்ச்சைகள் கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களில் வெளியாகி கொண்டிருக்கிறது.
குறிப்பாக பொன்முடியுனுடைய பேச்சு இலவசங்கள் குறித்து அவர் கட்சியின் கூட்டத்தில் பேசும்போது பேருந்துகளில் மகளிர் ஓசியில் பயணம் செய்வது அப்படிங்கறது வார்த்தையை பயன்படுத்தியது கடுமையான சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. அதே போல கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் கோரிக்கை மனு அளிக்க வந்தவரை நிற்க வைத்து கொண்டே பேசினார் என்பதும் சர்ச்சையாக இருந்தது. இந்த நிலையில் தான் கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
சமூகநீதி, சுயமரியாதை, பகுத்தறிவு இந்த கொள்கைகளின் வழியே சமத்துவ சமுதாயத்தை அடையணும் என்ற உயர்ந்த லட்சிய நோக்கத்தோடு தான் திராவிட முன்னேற்றக் கழகத்தை அண்ணா தொடங்கினார். அந்த லட்சிய பாதையில் தான் நாங்கள் தொடர்ந்து ஆட்சி நடத்திக் கொண்டிருக்கின்றோம். அந்த அடிப்படையில் திராவிட மாடல் அரசு தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறது. இதற்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக யாரும் எந்த விதமான செயல்களிலும் ஈடுபட வேண்டாம் அப்படின்னு கட்சிக்காரர்களுக்கு அவர் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
பேசக்கூடியவர்கள் கவனமாக பேச வேண்டும் என்று அறிவித்து இருப்பதோடு, நம்முடைய சித்தாந்தத்திற்கு எதிராக இருப்பவர்கள் தங்களது பேச்சை வெட்டி, ஒட்டிப் பதிவுகளில் பரப்பக்கூடிய அபாயம் இருக்கிறது என்கிற எச்சரிக்கையும் அவர் வெளியிட்டுள்ளார். மானமுள்ள ஆயிரம் பேருடன் நாம் போராட முடியும், மானம் இல்லாத ஒருவருடன் போராட முடியாது. அப்படின்னு பெரியார் சொன்னதையும் அவர் மேற்கோள் காட்டி இருக்கிறார்.
தமிழ்நாட்டில் எந்த வகையிலாவது காலூன்றி விட வேண்டும் என்று நினைக்கக்கூடிய மத வெறி நச்சு சக்திகள் இதுபோன்ற சூழல்களை பயன்படுத்திக் கொண்டு, தங்களை வளர்த்துக் கொள்ள முடியுமா ? தமிழ்நாட்டிலே அப்படின்னு எதிர்பார்க்காங்க. மக்களிடம் ஒரு குழப்பத்தை உண்டாக்கி களங்கத்தை ஏற்படுத்த பாக்கறாங்க. இதையெல்லாம் நிர்வாகிகள், அமைச்சர்கள், சட்டமன்ற – நாடாளுமன்ற – உறுப்பினர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
உங்களுடைய பேச்சு வெட்டியும், ஒட்டியும் குறிப்பிட்ட சில பகுதிகள் மட்டும் தவறான பொருள்படும்படியாக வாசகங்களோடு வெளியிட்டு, தங்களுக்கு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள அவர்கள் நினைக்கிறார்கள். நம்முடைய பயணம் என்பது மிக நீண்ட நெடிய பயணம். நம் பயணத்தில் ரொம்ப பொறுப்பு அதிகமா இருக்கு. அதனால ரொம்ப கவனமாக நாம் பயணிக்க வேண்டிய கட்டாயம் இருக்கு. அப்படின்னு கட்சிக்காரர்களுக்கு அவர் அறிவுறுத்தி இருக்கிறார்.