ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வராக அசோக் கெலாட் ஆட்சி செய்து வருகிறார். துணை முதல்வராக சச்சின் பைலட் உள்ளார். இந்நிலையில் காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் வருகின்ற அக்டோபர் 14ஆம் தேதி நடக்க உள்ளது. இதில் சோனியா காந்தி, ராகுல் காந்தி போட்டியிடாத நிலையில் அவர்களின் ஆதரவுடன் அசோக் கெலாட் போட்டியிடுகிறார். தற்போது காங்கிரஸ் கட்சியின் ஒரு நபர் ஒரு பதவி நடைமுறை பின்பற்றப்படுகிறது. இதனால் அசோக் தனது முதல்வர் பதிவியை ராஜினாமா செய்ய உள்ளார். எனவே ராகுல் காந்திக்கு மிகவும் நெருக்கமான சச்சின் பைலட்டை அடுத்த முதல்வராக நியமிக்க படலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து அசோக் லேலண்ட் வீட்டில் காங்கிரஸ் சட்டசபை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மேலிட பார்வையாளராக மல்லிகார்ஜுன கார்கே, அஜய் மக்கான் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது சச்சின் பைலட்டை முதல்வராக தேர்வு செய்ய காங்கிரஸ் எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 2020ல் சச்சின் பைலட் 18 எம்எல்ஏக்கள் உடன் சேர்ந்து அசோக் கெலாட்டுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். இதனால் அவரை முதல்வராக தேர்வு செய்யக்கூடாது. அதைத்தொடர்ந்து அசோக் கெலாட்டுக்கு ஆதரவாக நிற்கின்ற எம்எல்ஏக்களின் ஒருவரை முதல்வராக நியமிக்க வேண்டும் என்று கூறினார். இந்நிலையில் தங்கள் சொல்வதை கேட்காமல் கட்சி மேலிடம் சச்சின் பைலட்டை முதல்வராக நியமித்தால் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அசோக் கெலாட்டின் ஆதரவு எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய உள்ளதாக மிரட்டல் விடுத்துள்ளனர். தற்போதைய நிலவரம் படி 90 எம்எல்ஏக்கள் வரை தங்களின் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக மிரட்டுகின்றனர். இது குறித்து அசோக் கெலாட் ஆதரவு எம்எல்ஏக்கள் கூறியது, அசோக் கெலாட் முதல்வராக தொடர வேண்டும். இல்லையென்றால் அசோக் கெலாட் ஆதரவாளர்கள் ஒருவரை முதல்வராக நியமிக்க வேண்டும். ஆனால் சச்சின் பயலட்டை முதல்வராக விடமாட்டோம் என்று தெரிவித்துள்ளார். இதனால் ராஜஸ்தான் அரசியலில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.