செய்தியாளர்களிடம் பேசிய தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், எல்லா இடத்திலும் ஒன்றிய அரசாங்கம் பணத்தை வைத்து அரசியல் பண்றதில் மிகவும் தெளிவாக இருக்கிறது. ஒரே நேரத்தில் இரண்டு இடத்தில் அறிவித்த எய்ம்ஸ் மருத்துவமனையில், ஒன்னு கட்டிமுடிச்சி திறக்க போறாங்க. ஒன்னுல இன்னும் சுவர் கூட கட்டல. அதனால இது அரசியல் ரீதியாக ஒன் சைட் கேம் விளையாடுற மாதிரி எனக்கு தெரியுது. ஆனா அதுக்கு மேல ஒரு கருத்து சொல்லனும்.
இப்ப எத்தனையோ திட்டத்தை ”பிரதான் மந்திரி” என்னமோ… அப்படின்னு பெயர் மாத்துறாங்க. பிரதம மந்திரி என்ற பெயர் வைக்கணும்னு சொல்லிட்டு, முதல் வருஷம் சொல்லுவாங்க நாங்க 60%, நீங்க 40%, ரெண்டாவது வருஷம் சொல்லுவாங்க நாங்க 40%, நீங்க 60%, மூன்றாவது வருஷம் சொல்லுவாங்க நாங்க 20%, நீங்க 80% என சொல்லுவாங்க. ஆனால் பெயர் இன்னும் ”பிரதான் மந்திரி” அப்படின்னு இருக்கணும்.
தெளிவா சொல்லனும்னா… இந்த பயிர் காப்பீட்டு திட்டம். அதுக்கு ஏதோ ஒரு ஹிந்தி பேரு இருக்கு. அதோட பெயர் பிரதான் மந்திரி பசல் பீமா ஆனா அதுல 25% தான் அவங்க பங்கு, 75% நம்ம சுய வருமானத்தில் பங்கு செலுத்துகின்றோம். ஆனால் பிரதம மந்திரி பெயரை சொல்லணும். இதில் 75% மாநில அரசு நிதி கொடுக்கின்றோம். அப்போ இதையெல்லாம் அரசியலாக தான் செய்கின்றார்களே தவிர, திட்டமிட்டு மக்கள் நலனுக்காக பண்ற மாதிரி எனக்கு தெரியல என தெரிவித்தார்.