Categories
தேசிய செய்திகள்

“இந்தியாவின் வளர்ச்சிக்கு பெண்களின் பங்கு அதிகம்”….. ராகுல் காந்தி ஸ்பீச்….!!!

பாரத ஒற்றுமையே வலியுறுத்தி அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஒற்றுமையை பாதயாத்திரையை தொடங்கினார். இந்த பாதயாத்திரை திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழை எர்ணாகுளம் மாவட்டங்கள் வழியாக 300 கிலோமீட்டர் தூரத்தை கடந்து கடந்த 22ஆம் தேதி திருப்பூர் மாவட்டம் சாலைக்குடியில் நிறைவடைந்தது. அதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் 17 வது நாள் பாதயாத்திரை திருச்சூர் தோப்பு மைதானத்தில் இருந்து காலை 6:30 மணிக்கு தொடங்கியது.

அதன்பிறகு மாலை 4:30 மணிக்கு மீண்டும் வடக்கஞ்சேரி பகுதியில் இருந்து பாதயாத்திரை தொடங்கியது. பாதயாத்திரையில் பங்கேற்ற சிறுமிகள் மற்றும் பெண்களின் நலம் விசாரித்தபடி ராகுல் காந்தி நடந்து சென்றார். அப்போது ஒரு சிறுமி முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வேடமணிந்து பாதயாத்திரை கலந்து கொண்டு உற்சாகப்படுத்தினர். இதில் ராகுல் காந்தி, இந்தியாவின் வளர்ச்சிக்கு பெண்களின் பங்கு அதிகம் உள்ளதாக தெரிவித்தார். அதன் பிறகு மாலை 7 மணிக்கு செருத்துத்தி பகுதியில் பாதயாத்திரை நிறைவு செய்தார்.

Categories

Tech |