மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், மதத்தின் பெயரால் இந்த மண்ணில் மக்களை கூறு போட்டு, ஒரு இன துவேஷத்தை உருவாக்கி, ஒரு மத வெறியை உருவாக்கி, மனித நேயத்தை கொன்று குவித்து, நாங்கள் இந்து என்ற போர்வையில் இந்து ராஷ்ட்ரம் அமைப்போம் என்கின்ற போர்வையில், இந்தியா முழுக்க ஒரே உணவு என்கிறாய்.
இந்தியா முழுக்க ஒரே சட்டம் என்கிறாய், இந்தியா முழுக்க ஒரே ஆட்சிமுறை என்கிறாய், இந்தியா முழுக்க ஒரே தேர்தல் முறை கொண்டு வரப்போகிறேன் என்று கொக்கரிக்கிறாய். இந்தியாவின் முப்படைகள் கலைக்கப்பட்டு, முப்படைகளுக்கும் ஒருவனே தளபதி என்று அறிவிக்கிறாய். தேர்தல் ஆணையம் உனது கட்டுப்பாட்டில், உச்சநீதிமன்றம் உங்களது கட்டுப்பாட்டில்… சங்கபரிவார கும்பல்களே பன்னெடுங்காலமாக இந்த இந்திய சமூகம், இந்த இந்திய ஒன்றியம் எவ்வளவு ஒற்றுமையாக, இந்த தேசத்தின் அரணாக, இந்த தேசத்தின் பாதுகாவலனாக எல்லையில் ஆயிரமாயிரம் எதிரிகளை வீழ்த்தி, இந்தியாவின் எல்லையை காப்பவனாக இருக்கிற எனதருமை இஸ்லாமிய உறவுகளை திட்டமிட்டு உபா என்கின்ற பெயரிலும்,
NIA என்கின்ற பெயரிலும் எமது இளைய தலைமுறைகளின் வாழ்வை சீரழிக்க துடிக்கின்ற, பாசிச கும்பல்களே இந்த தேசம் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்று சொன்னால், இந்த தேசம் நிம்மதியாக வாழவேண்டும் என்று சொன்னால், இந்த தேசம் அமைதியோடு நகர வேண்டும் என்று சொன்னால்…. பாசிச சங்பரிவாரக் கும்பல்களே… நீங்கள் அடக்கப்பட வேண்டும் அல்லது காலம் உங்களை அடக்குவான் என்பதை இந்த ஆர்ப்பாட்டத்தில் கண்டிப்பாக எச்சரிக்கை சொல்கின்றோம் என தெரிவித்தார்.