உ.பியில் பாலியல் பலாத்காரம் செய்ததாக விதவை பெண் அளித்த புகாரில் பா.ஜ.க எம்.எல்.ஏ, அவரது குடும்பத்தினர் 6 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியை சேர்ந்த விதவை பெண் ஒருவரும், பதோகி தொகுதியின் பா.ஜ.க எம்.எல்.ஏ ரவீந்திரநாத் திரிபாதியின் (Ravindranath Tripathi) உறவினர் சந்தீப் (sandeep) என்பவரும் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் பேசிபழகி வந்துள்ளனர்.
அதை தொடர்ந்து சந்தீப் நான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறி அந்த பெண்ணுடன் மிகவும் நெருங்கிப் பழகி வந்தநிலையில், கடந்த 2017-ஆம் ஆண்டு அவரை பதோகிக்கு அழைத்து வந்து, அங்கு ஹோட்டல் ஒன்றில் அப்பெண்ணை தங்க வைத்துள்ளார்.
ஆனால் சந்தீப் அப்பெண்ணை இவ்வளவு நாட்களாக ஏமாற்றி வந்துள்ளார் என்று அப்போது தான் தெரியவந்தது. ஆம், பாஜக எம்.எல்.ஏ ரவீந்திரநாத் திரிபாதி மற்றும் மகன்கள் உட்பட அவரது குடும்பத்தினர் 6 பேர் அந்த பெண்ணை பலநாட்களாக அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக சொல்லப்படுகிறது.
இதுகுறித்து அந்த விதவைபெண் அளித்த புகாரின் பேரில் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.