மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பொதுக்கூட்டத்தில் பேசிய போது, மரியாதைக்குரிய மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஒரு ஆட்சி நடக்கிறது, இன்னொரு பக்கம் ஆளுநர் தலைமையில் ஒரு போட்டி ஆட்சி நடப்பதும் பகிரங்கமான உண்மை என்பதை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
எதற்கு இரண்டாம் தேதி பேரணி என்று கேட்டால் அவர் சொல்கிறார், வினோதமாக…. அம்பேத்கருடைய நூறாவது ஆண்டு கொண்டாடப் போகிறோம் என்கிறார்கள். அம்பேத்கருடைய 136 வது ஆண்டு கொண்டாடிவிட்டோம் நாம், யாராவது கொண்டாடுவார்களா ?ஒரு அரை கிறுக்கு பயல்களை வைத்து கொண்டு, எங்கேயாவது மெண்டல் ஆஸ்பத்திரியில் சேர வேண்டியவர்களை, இப்படிப்பட்டவர்களை ஆர்.எஸ்.எஸ்-இல் பிடித்து வைத்துக்கொண்டு..
ஆர்எஸ்எஸ்காரர்களுக்கு நான் எச்சரிக்கையாக சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நீங்கள் ஒரு புள்ளி வைத்தால், நாங்கள் பெரிய கோடு போடுவதற்கு தயங்க மாட்டோம் என்பதை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.ஆர்எஸ்எஸ் என்பது ஒரு பயங்கரவாத அமைப்பு, நாங்கள் என்ன கொலைகார அமைப்பா ? காந்தியை கொன்றவர்களா இங்கே உட்கார்ந்து இருக்கிறோம்.
இந்த நாட்டில் மதவெறியை கிளப்புகிற அமைப்பு அது. நாங்கள் மத நல்லிணக்கத்தை விரும்புகிற அமைப்பு, எனவே எங்களையும் அவர்களையும் ஒன்றாக பார்த்து, நீங்கள் அவர்களுக்கும் தடை, எங்களுக்கும் தடை என்றால் அப்பறம் நாங்கள் என்ன செய்வது ? வேற மாதிரி முடிவுக்கு தான் போக வேண்டும் என தெரிவித்தார்.